கோலாலம்பூர், பிப் 12 – கடப்பிதழுக்காக குழந்தைகளை புகைப்படம் எடுப்பது எளிதான காரியம் அல்ல. குடிநுழைவு அலுவலகத்திற்கு சென்றால்தான் குடிநுழைவு அதிகாரிகள் கடப்பிதழுக்காக குழந்தைகளை புகைப்படம் எடுக்கும்போது அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
புகைப்படம் எடுக்கும்போது குழந்தைகள் அழுதுகொண்டிருக்காமல் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகள் நேரடியாக கேமராவை கவனிக்க வேண்டும். ஒரு குழந்தையை புகைப்படம் எடுப்பதற்காக குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பொம்மையை பயன்படுத்தி அக்குழந்தையின் கவனத்தை கவர மேற்கொண்ட முயற்சி குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.