
ஹவாய், ஜூலை 3 – ஹவாய் கடற்கரையில் வழி தவறிய ஆமை ஒன்று பாறைகளின் இடையில் சிக்கிக் கொண்டு வெளிவர முடியாமல் தவித்து கொண்டிருந்ததை கண்ட ஆடவர் ஒருவர் அதனை காப்பாற்றும் காணொளி வைரலானதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடற்பாறையின் நடுவே அதிகமான அலைகள் அடித்து கொண்டிருந்த நிலையில் அந்த ஆமை பாறையிலிருந்து வெளிவர முடியமால் சிக்கி தவித்து கொண்டிருந்தது.
பாறைகள் மிக வழு வழுப்பாக இருந்த நிலையிலும் அந்நபர் சற்றும் அசராமல் சுமார் 33 இலிருந்து 49 கிலோ எடை கொண்ட அந்த ஆமையை காப்பாற்றி மீண்டும் கடலில் விட்டுள்ளார்.
அந்த ஆமை பாதுகாப்பாக கடலில் நீந்தி செல்லும் காட்சி பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது.