
போர்டிக்சன், ஏப்ரல்-3- UNITEN தனியார் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சூடான் நாட்டு மாணவர்கள் 7 பேர் வாடகைக்கு எடுத்திருந்த SUV Proton X70 வாகனம், இன்று அதிகாலை கடலில் ‘இறங்கியது’.
போர்டிக்சன், பத்து எம்பாட், பந்தாய் ச்சஹாயா கடலில் சுமார் 1 மீட்டர் ஆழத்தில் கார் மூழ்கி நிற்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
நோன்புப் பெருநாள் விடுமுறையைக் கழிப்பதற்காக அந்த 7 சூடானிய மாணவர்களும் அவ்வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
கடற்கரையில் BBQ இறைச்சி வாட்டுவதற்காக இடம் தேடி போன போது, கடல் மணலில் அவ்வாகனம் சிக்கியுள்ளது.
இதையடுத்து காலை 10.30 மணியளவில் புல்டோசர் உதவியுடன் அந்த SUV கடற்கரைக்கு இழுக்கப்பட்டது.
போர்டிக்சன் போலீஸ் இடைக்காலத் தலைவர் ருஸ்லான் மாட் கிப் அத்தகவலை உறுதிப்படுத்தினார்