Latestமலேசியா

கடலில் மூழ்கிய KD Pendekar கப்பல் மீட்புப் பணியின் போது கடற்படையின் நீர்மூழ்கி வீரர் மரணம்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் -29 – அரச மலேசியக் கடற்படையின் (TLDM) நீர்மூழ்கி வீரர் ஒருவர் ஜோகூர், கோத்தா திங்கி, Tanjung Penyusop கடல் பகுதியில் மரணமடைந்துள்ளார்.

கடந்த வாரம் அக்கடலில் மூழ்கிய KD Pendekar அரசக் கப்பலின் பாகங்களை மீட்கும் பணியில் ஈடிபட்டிருந்த போது அவர் உயிரிழந்ததை, கோத்தா திங்கி போலீஸ் உறுதிப்படுத்தியது.

எனினும் மேற்கொண்டு விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மற்றபடி அது இன்னும் விசாரணையில் இருப்பதாக, மாவட்ட போலீஸ் கூறியது.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி கடலுக்கடியில் ஏதோ ஒரு மர்மப் பொருளை இடித்து ஓட்டை விழுந்ததால், KD Pendekar கப்பலில் கடல் நீர் புகுந்து அது மெல்ல மூழ்கத் தொடங்கியது.

எனினும் அது முழுவதுமாக மூழ்வதற்குள் கடல் மார்க்க தரப்பு விரைந்து செயல்பட்டு கப்பலிலிருந்த 39 பணியாளர்களைக் காப்பாற்றியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!