Latestமலேசியா

கடல் அலை உயர்வால் Pantai Bersih கடலோரத்தையும் Bagan Ajam R&R-ரையும் நெருங்க வேண்டாம்; பொது மக்களுக்கு அறிவுறுத்து

பட்டவொர்த், செப்டம்பர் -18, கன மழை, புயல் காற்று மற்றும் நீர்பெருக்கினால் பினாங்குக் கடலோரங்களில் குறிப்பாக Pantai Bersih கடலில் நேற்று பெரும் அலைகள் எழுந்தன.

இதையடுத்து அங்குள்ள கடற்கரைகளை நெருங்க வேண்டாம் என பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Bagan Ajam R&R பின்புறம் வரை அலைகள் உயருவதால், அங்கு வரும் பொதுமக்களுக்கு அது மிகவும் பாதுகாப்பற்றது என, LLB எனப்படும் பட்டவொர்த் வெளிவட்ட நெடுஞ்சாலை தரப்பு நினைவுறுத்தியது.

Pantai Bersih கடலில் அலைகள் மேலெலும்பி, கடற்கரையில் உள்ள அங்காடி கடைகளிலும் Bagan Ajam R&R-ரிலும் கடல் நீர் புகுந்த வீடியோக்கள் முன்னதாக வைரலாகின.

அடித்து வரப்பட்ட கடல் நீர் புகுந்ததில் உணவகமொன்றின் தரை சரிந்த நிலையில், மற்ற கடைகளையும் நீர்பெருக்கு மோதிய வண்ணமிருந்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் தங்களையும் தங்களது உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்ள தலைத்தெறிக்க ஓடினர்.

வியாபாரிகளோ, கடையில் உள்ள பொருட்களைக் காப்பாற்றுவதில் மும்முரம் காட்டினர்.

எனினும் அச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!