Latestமலேசியா

கடல் கொந்தளிப்பு அலைகள் உயரும்போது நீச்சலை தவிர்ப்பீர்

சிரம்பான், ஏப் 25 – விழாக்கால நீண்ட விடுமுறை காலாத்தில் போர்ட்டிக்சன் கடற்கரைக்கு உல்லாச பொழுதை கழிப்பதற்கு செல்வோர் கடல் கொந்தளிப்பு மற்றும் அலைகள் உயரும்போது பாதுகாப்பு காரணங்களுக்காக நீச்சல் நடவடிக்கையை தவிர்க்கும்படி போட்டிக்சன் நகரான்மைக் கழகத் தலைவர் Mohd Zamri Mohd Esa கேட்டுக்கொண்டார். போட்டிக்சன் வட்டாரத்திலுள்ள 11 கரையோரப் பகுதிகளில் தங்களது விடுமுறையை கழிப்பதற்கு தனிப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் வருவது ஊக்குவிக்கப்பட்டாலும் தேவையற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதை தவிர்ப்பதற்கு ‘ தடுப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டுமென Mohd Zamri வலியுறுத்தினார். பொதுவாகவே போட்டிக்சன் வட்டாரத்தில் அனைத்து கரையோரப் பகுதிகளிலும் மக்கள் நீந்த முடியும். ஆனால் கடல் கொந்தளிப்பு மற்றும் அலைகள் உயரும்போது கடலில் நீந்துவதை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஞாயிற்றுக் கிழமை போட்டிக்சன் கடலுக்கு உல்லாச பொழுதை தங்களது குடும்பத்தினருடன் கழிக்கச் சென்ற 30 வயது, ஆர்.கலைவாணி. 29 வயது ஆர்.தேவகி. 19 வயதுடைய ஆர் . சத்தியதேவி ஆகியோர் மூழ்கி மாண்டனர். தங்களது மூன்று மகளையும் இழந்த பந்திங்கைச் சேர்ந்த பெற்றோர் ரவி -அஞ்சலை தம்பதியர் கண்ணீர் கடலில் மூழ்கி மீளா துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!