கோலா கெடா, பிக் 5 – Kuala Kedah படகு துறையிலிருந்து லங்காவியில் Kuah படகு துறைக்கான பயணப் படகுகளின் சேவைக்கான அட்டவணை கடல் நீர் பெருக்கத்திற்கு ஏற்ப கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது. லங்காவிக்கான பெர்ரி சேவை சுமுகமாக இருக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக Kuala Kedah வுக்கான Langkawi Ferry line நடவடிக்கை அதிகாரி Ahmad Azizan Aziz தெரிவித்தார். தற்போது கெடாவில் பொதுவாகவே கடல் நீர் பெருக்கம் குறைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் kuala Kedah வில் இந்த நிலை இருக்கும். கடல் பெருக்கம் குறைவாக இருக்கும்போது பயண சேவையில் ஈடுபடும் பெர்ரிகள் சகதியில் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். இதன் காரணமாகவே கடல் நீர் பெருக்கம் ஏற்படும் நிலைமைக்கு ஏற்ப பெர்ரி சேவைகளின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி16 hours ago