Latestமலேசியா

கடவுளைச் சந்திக்க பட்டினியாய் இருங்கள், கென்யாவில் தவறான மத போதனையால் இதுவரை 201 பேர் மரணம்

கென்யா, மே 14 -“கடவுளைச் சந்திக்க வேண்டும் என்றால் பட்டினியாய் இருங்கள்” என Kenya -வில் மேற்கொள்ளப்பட்ட தவறான மத போதனையால் இதுவரை 201 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் சிறுவர்களாவர். ஆகக்கடைசியாக 22 பேர் இறந்து கிடந்த சவக்குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Kenya, Shakahola எனும் இடத்தில் உள்ள “Good News International” தேவாலய பாதிரியாரின் இந்த தவறான மத போதனையில், அவரது ஆதரவாளர்கள் பட்டினியாய் இருக்க வற்புறுத்தப்பட்டதோடு, சம்பந்தப்பட்டவர்கள் பட்டினியாய் இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பாளர்கள் சிலரும் இருந்ததாக விசாதணையில் தெரியவந்துள்ளது.

Kenya – வை உலுக்கியுள்ளா இந்த தவறான மத போதனையில், இறந்த சிறுவர்களின் பெற்றோர்களே அவர்களின் குழந்தைகளை பட்டினியாய் இருக்க வற்புறுத்தியதாக நம்பப்படுகிறது.

இந்த தவறான மத போதனையின் அடிப்படையில், கடவுளை சந்திக்க முதலில் குழந்தைகள் பட்டினியாய் இருக்க வேண்டும், அவர்களைத் தொடர்ந்து அம்மாக்களும், இறுதியாக அப்பாக்கள் பட்டினியாய் இருக்க வேண்டுமாம்.

மருத்துவமனைகள் மற்றும் சவக்கிடங்கில் இடம் பற்றாக்குறையால், மேலும் இறந்தவர்களின் சடலங்களைத் தேடும் நடவடிக்கை தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!