Latestஉலகம்

கடும் போராட்டத்துக்குப் பின்னர் தூண்டிலில் சிக்கிய சுறா மீனை விடுவித்த ஆடவர் – வைரலான வீடியோ காட்சி

நியூயோர்க், ஆகஸ்ட் 17 – அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள கடற்கரையில் ஆடவர் ஒருவர் சுறா மீனின் வாலைப் பிடித்துக் கரைக்கு இழுத்துக் கொண்டு வரும் வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லோங் ஐலெண்ட் (Long Island) தீவுப் பகுதியில் நிகழ்ந்திருக்கும் அச்சம்பவத்தில் ஆடவர் ஒருவர், சுறா மீனின் வாலைப் பிடித்துக் கரைக்கு இழுத்து வரும் காட்சியும், சுறா மீன் தண்ணீருக்குத் திரும்பப் போராடும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

சம்பவத்தன்று அவ்வாடவர் சாதாரண மீனுக்குத் தூண்டில் போட, அதில் சுறா மீன் சிக்கிக் கொண்டது. உண்மையில், அவ்வாடவர் தூண்டிலில் மாட்டியிருந்த சுறா மீனை விடுவிக்கத் தான் முயன்றார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சுறா மீனின் வாயில் மாட்டியிருந்தத் தூண்டிலை அகற்றி விட்டு, மீண்டும் அதனை தண்ணீரிலேயே விட்டு விட்டார் அவ்வாடவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!