
கோத்தா கினபாலு, ஜன 5 – கடும் மழை பெய்ததைத் தொடர்ந்து Ranau – வில் பிரதான சாலையின் ஒரு பகுதி இடிந்தது. இதன் காரணமாக அந்த சாலை மூடப்பட்டதால் வாகன ஓட்டுனர்கள் மாற்று சாலையை பயன்படுத்தும்படி வலியுறுத்தப்பட்டனர். Ranau – வில் Jalan Kota Kinabalu -Sandakan சாலையில் 109.378 கிலோமீட்டரில் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக Ranau மாவட்ட பொதுப் பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.