Latestமலேசியா

கடைகளில் பாராசிட்டமால் ( Paracetamol ) மாத்திரைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு

கோலாலம்பூர், பிப் 18 – கோலாலம்பூர் உட்பட நாட்டின் சில மாநிலங்களில், மருந்தகங்களிலும், கடைகளிலும், காய்ச்சல் மற்றும் தலைவலிக்காக மக்கள் பரவலாக பயன்படுத்தும் வலி நிவாரணியான பாராசிட்டமால் ( Paracetamol ) மாத்திரைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று அதிகரித்திருக்கும் தற்போதைய கால கட்டத்தில் , முன்னணி முத்திரை கொண்ட பாராசிட்டமால் மாத்திரைகள் அதிகம் வாங்கப்பட்டிருக்கிறது. இதனால் மருந்தகங்களில் அத்தகைய மாத்திரைகளுக்கான கையிருப்பு முடிந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனிடையே, பூஸ்டர் தடுப்பூசிக்குப் பின்னர் ஏற்படும் காய்ச்சல் , மூட்டு வலி, தலைவலி போன்ற பக்க விளைவுகளுக்காக மக்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை வாங்குவதாக சில மருந்ததகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதனிடையே, பாராசிட்டமெல் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை மலேசிய மருந்தக சங்கத்தின் தலைவர் அம்ராஹி புவாங் ( Amrahi Buang ) உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!