Latestமலேசியா

கடையில் உணவருந்தி கொண்டிருந்த நபருக்கு பாராங்கத்தி வெட்டு

பொந்தியான், பிப் 15 – கடை ஒன்றில் உணவருந்திக் கொண்டிருக்கும் போது, பாராங்கத்தியால் ஆடவர் தாக்கப்பட்ட சம்பவம் ஜோகூர், பொந்தியானில் உள்ள பெக்கான் பெனுட் ( Pekan Benut )பகுதியில் நிகழ்ந்திருக்கிறது.

அந்த சம்பவம் தொடர்பில், நேற்று மாலை மணி 3.12-வாக்கில் பொது மக்களிடமிருந்து அவசர அழைப்பு வந்ததாக, பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் முஹம்மட் ஷோஃபி தாயிப் ( Mohammad Shofee Tayib ) தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க நபரைத் தாக்கிய 2 ஆடவர்கள் பின்னர் வெள்ளை நிற தொயோத்தா காரில் தப்பித்து சென்றதாக , சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட கடையில் உள்ள CCTV காமிராவில் பதிவான வேளை, அதன் தொடர்பான காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!