Latestமலேசியா

கடையை உடைத்து கொள்ளையடித்தனர்; தம்பதியர் கைது

பெந்தோங், டிச 6 – பெந்தோங் வட்டாரத்தில் கடை மற்றும் வாகனத்தை உடைத்து கொள்ளையிட்ட ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டனர். 31 வயதுடைய சந்தேகப் பேர்வழி கிள்ளானிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட வேளையில் அந்த நபரின் மனைவி பெந்தோங் போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரடண்ட் Zaiham Mohd Kahar தெரிவித்தார். அந்த சந்தேகப் பேர்வழி ஓட்டிச்சென்ற காரை பரிசோதித்துப் பார்த்தபோது காணாமல்போனதாக புகார் செய்யப்பட்ட திருட்டுப் பொருட்கள் அக்காரில் இருந்ததைத் தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த சந்தேகப் பேர்வழியிடமிருந்து 400 வெள்ளி ரொக்கம் மற்றும் ஐந்து கை தொலைபேசிகளுடம் பறிமுதல் செய்யப்பட்டதாக Superintendan Zaiham Mohd Kahar தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!