
பினாங்கு, ஜோர்ச் டவுனில், இரண்டி மாடி கடை வீடு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில், மாற்று திறனாளி ஆடவர் ஒருவர் கருகி உயிரிழந்தார்.
அவசர அழைப்பு கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பினாங்கு மாநில தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், அதிகாலை மணி 4.45 வாக்கில் தீயை முழுமையாக கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட கடை வீட்டின், கீழ் மாடியிலுள்ள, குளியல் அறையிலிருந்து கருகிய நிலையில், சம்பந்தப்பட்ட ஆடவரின் சடலத்தை அவர்கள் கண்டெடுத்தனர்.
உயிரிழந்தவர் யார் என்ற அடையாளம் இதுவரை தெரியவில்லை. எனினும், பொதுமக்கள் வழங்கிய தகவலில் அடிப்படையில் அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது தெரிய வந்துள்ளது.
அதோடு, தீக்கிரையான கடை வீட்டில் மின்சார இணைப்பு இல்லாததால், மெழுகுவர்த்தியில் இருந்து தீ பரவி இருக்கலாம் என்பதும் தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.