செர்டாங், பிப் 20 – ஶ்ரீ கெம்பாஙான், செர்டாங் பெர்டானாவில் நிகழ்ந்த சண்டையில், வீட்டு – அலுவலக தளவாடப் பொருட்களை விற்கும் கடை உரிமையாளர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் .
நேற்றிரவு மாலை மணி 7-க்கு நிகழ்ந்த அந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 29 வயது பெண் அவரது கடையில் , ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார்.
முன்னதாக, சண்டை நிகழ்ந்திருப்பதாக ஆடவர் ஒருவரிடமிருந்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக, செர்டாங் மாவட்ட போலிஸ் தலைவர் எ.எ அன்பழகன் தெரிவித்தார்.
கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை போலீசார் கண்டறிந்து வருவதாகவும், கொலை செய்த நபரையும் தேடி வருவதாக அவர் கூறினார்.