
கோலாலம்பூர், பிப் 1 – கட்சிகளுக்கு உள்ளேயே இருக்கும் எதிரிகளிடம் இருந்து அம்னோவைக் காப்பாற்றுவதற்காக, நடவடிக்கை எடுப்பதை தவிர தமக்கு வேறு தேர்வில்லை என கூறியிருக்கின்றார் அம்னோ தலைவர் Ahmad Zahid Hamidi.
கட்சிக்குள் கருத்து வேறுபாட்டினை வரவேற்கலாம் . ஆனால் கட்சியின் உயர்நெறி குறித்து கேள்வியெழுப்பும் தரப்பினருடன் அனுசரித்து போக முடியாது என அவர் குறிப்பிட்டார்.
கட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்ட எந்தவொரு தரப்பையும் சுட்டிக் காட்டாத சாஹிட், அம்னோவை வழிநடத்துவதில் தாம் எடுத்த எந்தவொரு முடிவும் தனிநபர் மீதுள்ள வெறுப்பின் காரணமாக அல்ல; மாறாக கட்சியைக் காப்பாற்றும் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது எனக் கூறினார்.
கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவு தலைவர் கைரி ஜமாலுடின், சிலாங்கூர் அம்னோ முன்னாள் தலைவர் நோ ஓமார் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கிய முடிவால், அஹ்மாட் சஹிடி கடுமையான குறை கூறலுக்கு ஆளாகியிருக்கின்றார்.