கோலாலம்பூர், பிப் 17 – கட்சி தாவலுக்கு எதிரான சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வேண்டுமென்றே அரசாங்கம் தாமதப்படுத்தப்படுகிறதா என புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் வினவியுள்ளார்.
கட்சி தாவல் தொடர்பான விளக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒருமித்த கருத்தை கொண்டிருக்கவில்லை என நாடாளுமன்றம் மற்றும் சட்ட விகாரங்களுக்கு பொறுப்பு ஏற்றிருக்கும் Wan Junaidi Tuanku jaafar கூறியிருந்தார்.
கட்சி தாவலுக்கு எதிரான சட்டத்தை அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமே தவிர தேவையற்ற சாக்குப் போக்கு கூறி சமாளித்துக்கொண்டிருக்கக்கூடாது என Wan Junaidi க்கு ராம் கர்ப்பால் சிங் நினைவுறுத்தினார்.