கோலாலம்பூர் , பிப் 16 – நம்பிக்கையான மற்றும் சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதுதான் கட்சி தாவலுக்கு எதிரான சட்டத்தை கொண்டிருப்பதன் கட்டாயமாக இருந்தாலும் அந்த சட்டத்திற்கு ஒருமித்த அர்த்தத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருக்கவில்லை.
கட்சித் தாவலுக்கு எதிரான சட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது சொந்த அர்த்தத்தையும் விளக்கத்தையும் கொண்டிருப்பதாக சட்ட அமைச்சர் Wan Junaidi Tuanku Jafar தெரிவித்தார்.
அப்படி இருக்கும்போது ஒரு கட்சிக்கும் மற்றொரு கட்சிக்கும் மற்றும் ஒரு கூட்டணிக்கும் மற்றொரு கூட்டணிக்கும் கட்சி தாவலுக்கு எதிரான சட்டத்தில் வேறுபாடான ,முரண்பாடான அர்த்தத்தை கொண்டுள்ளனர். அப்படியிருக்கும்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத சுயேச்சை உறுப்பினர்கள் எவ்வாறான நிலையை கொண்டிருப்பார்கள் என Wan Junaidi கேள்வி எழுப்பினார்.