பெட்டாலிங் ஜெயா, மே 29 – 22 மாத கால ஆட்சியின்போது பக்காத்தான் ஹராப்பான் மீது கொண்டுள்ள அதிருப்தி காரணமாக பி.கே.ஆர் தேர்தலில் அதிகமான உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என அன்வார் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதிகாரத்தில் இருந்தபோது பக்காத்தான் ஹராப்பான் டோல் ரத்துச் செய்வது உட்பட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென
otai Reformasi குழுவின் செயலாளரான அப்துல் ரசாக் தெரிவித்தார். பி.கே.ஆர் தலைவர் தேர்தலில் கட்சியின் தலைவராக அன்வார் போட்டியின்றி வெற்றி பெற்றதால் அதுவே போதும் என்ற மனப்பான்மைனை பி.கே.ஆர் உறுப்பினர்கள் கொண்டிருந்ததும் அவர்கள் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம் என அப்துல் ரசாக் சுட்டிக்காட்டினார்