Latestமலேசியா

கட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் சட்டவிதியில் அம்னோ திருத்தம் செய்யவிருக்கிறது

கோலாலம்பூர், மே 15 – 15 ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு ஆறு மாதங்களுக்குள் கட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்று அம்னோவின் சட்டவியில் திருத்தம் செய்யப்படவுள்ளன. இன்று புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெறும் அம்னோவின் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அக்கட்சியின் சுமார் 2,000 பேராளர்கள் இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவார்கள் என அம்னோ நிர்வாகச் செயலாளர் டத்தோ Mohd Sumali Reduan தெரிவித்தார். அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடியின் உரையோடு இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் அந்த சிறப்புக் கூட்டம் தொடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!