
கோலாலம்பூர், ஜன 13 – அம்னோ கட்சித் தேர்தலில், தலைவர், துணைத் தலைவர் ஆகிய இரு உயர் மட்ட பதவிகளுக்கு போட்டியிருந்தால் , அப்பதவிகளுக்கு போட்டியிட தாம் தயாராக இருப்பதாக, டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் கூறியிருக்கின்றார்.
எனினும், அவ்விரு பதவிகளில் எந்த பதவிக்கு அவர் போட்டியிடப் போகிறார் என அவர் தெரிவிக்கவில்லை. அதோடு அந்த இரு பதவிகளுக்கும் போட்டியிருக்குமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டுமென ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.