பாசிர் கூடாங், மார்ச் 7 – ஜோகூர், பாசிர் கூடாங்கில், சாலையருகே நடப்பட்டிருந்த கட்சி கொடி, கழுத்தை சுற்றியதால், மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து, இளம் பெண் ஒருவருக்கு இரு கைகளில் முறிவு ஏற்பட்டதோடு, கழுத்தில் காயமும் ஏற்பட்டது.
தனது மகள் தனியொருவராக மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டு சென்ற போது அந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை Md Shahril Mahmood தெரிவித்தார்.
வேகமான காற்றால் சாலையோரத்தில் நடப்பட்டிருந்த கொடி தனது மகளின் முகத்தில் பட்டு, பின்னர் கழுத்தை சுற்றிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, வாகனமோட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் சாலைக்கு மிக அருகில் கட்சி கொடி பொருத்தப்பட்டது தொடர்பில் தான் போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.