Latestமலேசியா

கட்சி தலைவர்கள் நீக்கப்பட்டதும் இடைநீக்கமும் சட்டவிரோதமானது – இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர், ஜன 29 – அம்னோவிலிருந்து சில தவைர்கள் நீக்கப்பட்டது மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது என அக்கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரான Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார். அத்தகைய நடவடிக்கைகையை தாம் ஆதரிக்கவில்லையென்று தமது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். சட்ட நடைமுறை மற்றும் நீதிக்கு எதிராக அந்த நடவடிக்கை இருப்பதோடு குற்றஞ்சாட்டப்பட்டவகள் தங்களை தற்காத்துக்கொள்வதற்கான உரிமை வழங்கப்படவில்லை என்றும் Ismail Sabri தெரிவித்தார். கட்சித் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கட்சித் தலைவருக்கு ஆலோசனை தெரிவிக்கவில்லையென தமக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் Khairy Jamaluddin மற்றும் சிலாங்கூர் அம்னோவின் முன்னாள் தலைவர் Noh Omar ஆகியோர் 15ஆவது பொதுத் தேர்தலில் கட்சி ஒழுங்கை மீறியதற்காக வெள்ளிக்கிழமையன்று நீக்கப்பட்டதோடு அம்னோவின் முன்னள் உதவித் தலைவரும் Sembrong நாடாளுமன்று உறுப்பினர் Hishamudin Hussein, முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் Sharil Hamdan , Tebrau டிவிசன் தலைவர் Maulizan Bujang, Jempol நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் Salim Sharif ஆகியோர் ஆறு ஆண்டு காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!