கோலாலம்பூர், பிப் 12 – கட்சி தாவலுக்கு எதிரான சட்டத்தை இயற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் மலேசியா என்படும் வெளிப்படை தன்மைக்கான அனைத்துலக மலேசியா அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. கட்சி தாவியர்களால் அரசாங்கம் நிலைத்தன்மையற்ற சூழ்நிலைக்கு உள்ளாகிறது. தேசிய வளங்கள் விரயமாகுவதை தடுப்பதற்கும் கட்சி தாவலுக்கு எதிரான சட்டம் மிகவும் அவசியம் என டிரான்பேரன்ஸி அனைத்துலக மலேசியா வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியது.
மேலும் அரசியல் நன்கொடை மூலம் பொது நிதிகள் கடத்தப்படுவது மற்றும் கையூட்டு பெறுவதை தடுப்பதற்கு அரசியல் நிதி மசோதாவும் தேவையாகும். கடந்த பொதுத் தேர்தல் முதல் மலேசியாவில் மூன்று கூட்டரசு அரசாங்கங்கள் மாறிவிட்டன. கட்சி தாவியர்களால் மூன்று மாநிலங்களில் திடீர் தேர்தல் நடந்துள்ளன.கோவிட் தொற்று காலத்தில்தான் கட்சி தாவிய சம்பவங்கள் அதிகமாக அரங்கேறியுள்ளன. எனவே கட்சி தாவலை தடுக்கும் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என டிரான்பேரன்ஸி இன்டர்நேசனல் கேட்டுக்கொண்டது.