கோலாலம்பூர், பிப் 24 – கட்சி தாவலை எதிர்க்கும் சட்டம் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ Wan Junaidi Tuanku Jaafar நம்பிக்கை தெரிவித்தார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தாம் நடத்திய கலந்துரையாடலை தொடர்ந்து கட்சி தாவலை எதிர்க்கும் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக ஆதரவு வழங்குவார்கள் என நம்புவதாக அவர் கூறினார்.
ஒட்டுமொத்தமாக அந்த புதிய சட்டத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் . நாடாளுமன்றத்தின் 220 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான 148 பேர் ஆதரவை பெற்றால் அல்லது அவர்கள் அங்கீகரித்தால் அந்த புதிய சட்டம் நிறைவேறிவிடும் என Wan Junaidi Tuanku Jaafar தெரிவித்தார்.