கோலாலம்பூர், பிப் 14 – அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் கட்சி தாவலை தடுக்கும் மசோதாவை தாக்கல் செய்யத் தவறினால் அரசாங்கத்துடனான புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகிக்கொள்வோம் என பக்காத்தான் ஹராப்பான் பிரதமருக்கு எச்சரித்துள்ளது. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் புரிந்துணர்வு உடன்பாடு இயல்பாகவே ரத்தாகிவிடும்.
ஏற்கனவே பிரதமர் Ismail Sabri Yaakobடன் அமனா தலைவர் முகமட் ஷாபு, DAP தலைமைச் செயலாளர் Lim Guan Eng மற்றும் தாமும் இது குறித்து ஜனவர் 20 ஆம்தேதி தெரிவித்துவிட்டோம் என பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இன்று ஜோகூர் பாருவில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் மூடாவின் தேர்தல் இயந்திரத்தை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.