கோலாலம்பூர், மார்ச் 1 – கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்திற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri yaakob எதிர்க்கட்சி தலைவர்களிடம் உறுதியளித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களான டத்தோஸ்ரீ அன்வார் இப்ரஹிம், முகமட் சாபு மற்றும் லிம் குவான் எங் ஆகியோரை சந்தித்தபோது அவர் இந்த உறுதியை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது ஜோகூர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான SOP யில் தளர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் தாங்கள் பிரதமரிடம் கேட்டுக்கொண்டதாக பி.கேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.