கோலாலம்பூர், பிப் 11 – கோலாலம்பூரிலிருந்து தாவாவ்விற்கு நேற்றிரவு பயணச் சேவையில் ஈடுபட்டிருந்த ஏர் ஆசியாவின் ஏர் பஸ் A 320 விமானத்திற்குள் பணம் செலுத்தாமல் பயணம் செய்த விருந்தாளியாக பாம்பு ஒன்று காணப்பட்டது. பயணிகள் அமரும் இருக்கைக்கு மேலே உள்ள பகுதியில் அந்த பாம்பு ஊர்ந்துசெல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தாவாவில் தரையிறங்கவேண்டிய அந்த விமானம், பயணிகளின் பாதுகாப்பு கருதி கூச்சிங்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி Liong Tien Ling உறுதிப்படுத்தினார். மேலும் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் கூடிய விரைவில் விமானம் தாவாவிற்குப் புறப்படும் என்றும் அவர் கூறினார்.
Related Articles
Check Also
Close