
புதுடில்லி, ஆக 23 – இந்தியாவில் Mizoram மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் ரயில்வே பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 17 தொழிலாளர்கள் மாண்டனர். பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மிஷோராமில் Aizawl மாவட்டத்தில் Sairang என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதனிடையே இந்த சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , மிஷோராம் முதலமைச்சர் ஷோரம்தங்கா மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரும் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர்.