வெல்லிங்டன் , பிப் 3 – தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள ஆஸ்திரேலியாவிலுள்ள நியூசிலாந்து மக்கள் பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து தாயகம் திரும்பினால் அவர்கள் தனித்திருக்க வேண்டியதில்லை. அதே வேளையில் நியூசிலாந்திற்கு வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த இதர மக்கள் இரண்டு வாரத்திற்கு பிறகு நியுசிலாந்தில் தனிமைப்படுத்தும் நடவக்கைக்கு உள்ளாக வேண்டியதில்லை. கட்டம் கட்டமாக எல்லைகளை திறக்கும் முடிவு குறித்து நியூசிலாந்து பிரமர் Jacinda Ardern அறிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொண்ட தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களும் அனைத்துலக மாணவர்களும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கிடையே நாடு திரும்பும்போது அவர்கள் தங்களை சொந்தமாக தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்றும் நியுசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
Related Articles
Check Also
Close