Latestமலேசியா

கட்டாயத் தொழிலாளர்கள் விவகாரத்தில் சமரசம் கிடையாது மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

புத்ரா ஜெயா, ஆக. 30- கட்டாய தொழிலாளர்கள் விவகாரத்தில் எந்த தரப்புடனும் சமரசம் செய்து கொள்ளாது என மனித வள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்திருக்கிறார். First Solar (Malaysia) Sdn. Bhd நிறுவனம் HighTech Park, Kulim, Kedah-வில் இயங்குகிறது. உற்பத்தி தொழிற்சாலையான இந்த நிறுவனம் அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஃபர்ஸ்ட் சோலார் இன்க் (Inc di Arizona, Amerika Syarikat) நிறுவனத்திற்கு சொந்தமானது.உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமே இருப்பினும், நான்கு ஒப்பந்ததாரர்கள் (kontraktor) மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்ததாரர்களின் முதலாளிகள் அந்நியத் தொழிலாளர்களின் பாஸ்போர்ட் மற்றும் மற்றும் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட First Solar (Malaysia) Sdn. Bhd நிறுவனம் நடவடிக்கை எடுத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் ஊதியத்தை திருப்பித் தரும்படி ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மலேசிய தொழிலாளர் துறை இன்னும் சம்பந்தப்பட்ட First Solar (Malaysia) Sdn. Bhd நிறுவனத்திடம் இருந்து தேவையான தகவல்களைப் பெறவில்லை. இது தொடர்பில் கூடுதல் தகவல்களை கொடுக்க அமெரிக்காவின் கார்ப்பரேட் அலுவலகத்தின் அனுமதி தேவை என நியமிக்கப்பட்டுள்ள 4 நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் தொடர்பான எந்த தகவலும் பெறவில்லை. இந்த கட்டாய தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் மனிதவள அமைச்சு மேலும் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று சிவகுமார் இன்று தெரிவித்தார்.

மனிதவள அமைச்சு அனைத்துத் துறைகளிலும் கட்டாயத் தொழிலாளர் பிரச்சினையைத் தீர்க்க உறுதிபூண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!