
புத்ரா ஜெயா, ஜன 11 – கட்டாய மரண தண்டனைக்கு பதிராக மாற்று தண்டனையை அமல்படுத்துவதற்கான ஆலோசகனை மற்றும் கருத்துக்களை அரசாங்கம் பரிசீலிக்கிறது. முன்னாள் தலைமை நீதிபதி Tun Richard Malanjum தலைமையிலான சிறப்புக் குழு தெரிவித்த பரிந்துரைகளும் இவற்றில் அடங்கும் என பிரதமர்துறையின் சட்டம் மற்றும் அமைப்புகள் சீரமைப்புக்கான துணையமைச்சர் ராம் கர்பால் சிங் தெரிவித்தார். அந்த சிறப்புக் குழு சிவில் அமைப்புகள் மற்றும் அரசு சார்பற்ற இயங்களுடன் கலந்துரையாடல் நடத்தி ஆலோசனைகளை பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் இது தொடர்பான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும் என ராம் கர்பால் சிங் கூறினார்.