
கோலாலம்பூர். மார்ச் 27 – கட்டாய மரண தண்டனையை ரத்துச் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அந்த மசோதவின் முதலாவது மற்றும் இரண்டாவது வாசிப்பு இன்று படிக்கப்பட்டு அனைத்து எம்.பிக்களுக்கும் நாளை விளக்கம் அளிக்கப்படும் என பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்புக்கு பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீAzalina Othman Saidதெரிவித்தார். கட்டாய மரண தண்டனையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஒற்றுமை அரசாங்கம் எடுத்துள்ளது குறித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்ட Azalina சட்டத்தின் நோக்கம் நிறைவேறுதற்கான முறையான திருத்தங்களை அது கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்