
கோலாலம்பூர், ஏப் 3 – கட்டாய மரண தண்டனையை ரத்துச் செய்யும் மசோதாவை நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது குரல் பதிவு வாக்கெடுப்பின் மூலம் அந்த மசோதா நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கினர். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக அந்த மசோதாவை வாசித்த பிரதமர்துறையின் சட்ட மற்றும் இயக்கங்கள் சீரமைப்புக்கான துணையமைச்சர் ராம் கார்ப்பால் சிங், தண்டனையை வழங்குவதில் நீதிபதிகள் தங்களது பிரத்தியோக அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். கட்டாய மரண தண்டனைக்கு பதிலாக 40 ஆண்டுகள்வரை சிறை விதிக்கும் பிரத்தியோக உரிமைக்கு நீதிபதிகளுக்கு அந்த மசோதா அனுமதி வழங்குகிறது. அந்த மசோதா மீதான விவாதத்தில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர் .