Latest
கட்டிடத்திலிருந்து கீழே குதிக்க முயன்ற பெண் காப்பாற்றப்பட்டார்

கோத்தா கினபாலு, ஜன 23 – கோத்தா கினபாலு, கம்போங் ஆயரில் Jalan Laiman Diki யிலுள்ள ஒரு கட்டிடத்திலிருந்து கீழே குதிக்க முயன்ற பெண்ணிடம் 10 நிமிடங்கள் பேச்சு நடத்தியதன் மூலம் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதிலிருந்து அப்பெண்ணை தீயணைப்புப்படை வீரர்கள் காப்பாற்றினர். தமது கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து 30 வயதுடைய அப்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த கட்டத்திற்கு வந்த அந்த பெண்ணின் கணவரும் தற்கொலை முயற்சியை கைவிடும்படி அப்பெண்ணை வலியுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். தகவல் அறிந்து அந்த கட்டிடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அப்பெண்ணிடம் நயமாக பேச்சு நடத்தி 10 மீட்டர் உயரம் கொண்ட அந்த கட்டிடத்திலிருந்து குதிக்கும் அவரது முயற்சியை முறியடித்தனர். பின்னர் அந்த பெண்ணை போலீசாரிடம் தீயணைப்பு படை வீரர்கள் ஒப்படைத்தனர்.