
லண்டன், ஆக 29 – பிரிட்டனில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறினால் அந்நாட்டின் விமானச் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. தொழிற்நுட்ப கோளாறினால் விமான பயண திட்டங்கள் வழக்கம்போல் தானியங்கி முறையில் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விமானிகள் விமானத்தை இயக்கும் வழித்தடம் பற்றிய தகவல்களை தரைக்கட்டுப்பாடு மையத்திற்கு தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. விமானச் சேவை முழுமையாக முடங்கவில்லை என்ற போதிலும் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டும் பல விமானங்கள் தாமதமாகவும் புறப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகளும் பெரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகினர்.