
கோலாசிலாங்கூர், செப் 11 – டைலசிஸ் எனப்படும் சிறுநீரக சுத்திகரிகப்பு சிசிச்சை முடிந்துவிட்டு தனது காரில் ஆடவர் ஒருவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அக்கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்தது. 51 வயதுடைய அந்த ஆடவர் பண்டார் தாசேக் புத்ரியிலுள்ள தமது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்திற்கு உள்ளானார்.
ஜாலான் ஆலாம் பெர்டானா – பண்டார் புஞ்சாக் ஆலாமில் உள்ள கால்வாயில் கார் ஒன்று விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் இயக்குனர் வான் முஹமட் ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த ஆடவர் ஓட்டிய புரோட்டோன் சகா கார் மூன்று மீட்டர் ஆழத்திலுள்ள கால்வாயில் விழுந்து கிடந்ததாகவும் எனினும் பொதுமக்களின் உதவியோடு அந்த ஆடவர் காரிலிந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து முகத்தில் காயம் அடைந்த அந்த ஆடவர் ஆம்புலன்ஸ் மூலம் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்தாக வான் முஹமட் ரசாலி தெரிவித்தார்