
மூவார், மார்ச் 18 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 144 ஆவது கிலோமீட்டரில் இன்று காலை மணி 7.25 அளவில் Ferrari Super காரின் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து நால்வர் பயணம் செய்த Toyota Camry காரின் பின்னால் மோதினார். சிங்கப்பூரைச் சேர்ந்த 22 வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற அந்த Ferrari கார் கோலாலம்பூருக்கான பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது போது சாலையின் வலது பகுதி தடத்தில் Toyota Camry காரில் மோதியதால் அவ்விரு கார்களும் கவிழ்ந்தன. அந்த Toyota Camry காரில் இருந்து நான்கு பயணிகள் சொற்ப காயம் அடைந்ததாக மூவார் மாவட்ட போலீஸ்தலைவர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.