Latestமலேசியா

கட்டுமானத் தளத்தில் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்த வெளிநாட்டு ஆடவர்; பெண் உள்ளிட்ட 9 பேர் கைது

மெங்கிளம்பு, ஜூன்-18, பேராக், ஈப்போவில் உடம்பில் கத்திக் குத்து காயங்களுடனும் முகத்தில் கீறல்களுடனும் வெளிநாட்டு ஆடவர் இறந்து கிடந்தார்.

20-30 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் இன்று அதிகாலை தாமான் மெங்கிளம்புவில் உள்ள கட்டுமானத் தளமொன்றில் வாயில் ரத்தக் கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரின் அடையாளம் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை என ஈப்போ போலீஸ் கூறியது.

தொடக்கக் கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் 1 பெண் உள்ளிட்ட 9 வெளிநாட்டு பிரஜைகள் கைதாகியுள்ளனர்.

அந்த 9 பேரும் விசாரணைக்காக 1 வாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் போலீசை தொடர்புக் கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!