
செலாயாங், செப் 9 – கட்டையால் அடித்து இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்ணுக்கு படுகாயம் விளைவித்ததாக, 35 வயதான கே. ரினேஷினி நாயுடு மீது , செலாயாங் செஷன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
தனியார் நிறுவனமொன்றின் நிர்வாகியான அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை மறுத்திருக்கின்றார்.
இவ்வேளையில் முன்னதாக, கிள்ளானில் உள்ள செஷன் நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரியான தனது கணவர் எஸ். விஜயன் ராவுடன் சேர்ந்து ரினேஷினி மீது மேலுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
படுகாயம் ஏற்படும் அளவிற்கு பணிப்பெண்ணை கடும் உடல் உழைப்புக்கு உட்படுத்தியதாக அவ்விருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.