Latestசிங்கப்பூர்
கட்ட வேண்டியதோ RM198; கடைசியில் ஏமாந்ததோ RM68,000

சிங்கப்பூர், ஆக 18 – சிங்கப்பூரில் 54 வயது பெண் ஒருவர் 198 ரிங்கிட்டிற்கு உணவு ஆர்டர் செய்யும் பட்சத்தில் தமது Android கைப்பேசியில் மூன்றாம் தரப்பு செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைப்பை கிளிக் செய்ததால் 68 ஆயிரம் ரிங்கிட்டை மோசடி கும்பலிடம் ஏமாந்தார். பதிவிறக்கம் செய்த செயலி அவரின் கடன் பற்று அட்டை கணக்கு விபரம் மோசடி கும்பலின் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டதை அவர் அறியவில்லை.