Latestமலேசியா

கணபதி மரண விவகாரம் முழுமையான விசாரணை நடத்தும்படி ஜ.ஜி.பியிடம் மனு

கோலாலம்பூர், மே 4- போலீஸ் தடுப்புக் காவலின்போது தாக்கப்பட்டு காயம் அடைந்ததால் மரணம் அடைந்த கணபதி விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தும்படி மலேசிய இந்தியர்களின் நம்பிக்கை இயக்கம் போலீஸ் படைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லாவிடம் மனு வழங்கியது.

மலேசிய இந்தியர்களின் நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் மணிமாறன் மாணிக்கம் மற்றும் மரணம் அடைந்த கணபதியின் மனைவி ராஜமலர் மோகனன் இந்த மனுவை வழங்கினர்.

அதோடு கணபதியின் மரணத்திற்கு பொறுப்பான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அரச மலேசிய போலீஸ் படையின் நன்னெறி பிரிவின் இயக்குனருக்கும் மனு வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் படைத் தலவருக்கும் வழங்கப்பட்ட அந்த மனுவை புக்கிட் அமான் ஊடக தொடர்பு விவகாரப் பிரிவைச் சேர்ந்த ஏ.எஸ்.பி கலிடத்துல் அக்மால் பெற்றுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!