
மலாக்கா, ஜன 28 – மலாக்கா, Alai-யில் தனது கணவருக்கும் மாமியாருக்கும் சொந்தமான 5 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான ரொக்கத்தையும் நகையையும் திருடியதாக, பெண் ஒருவரைப் போலிசார் கைது செய்தனர்.
கணவர் கொடுத்த புகாரை அடுத்து, 37 வயதான அந்த பெண் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டு, இரு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டதாக , Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைவர் Christopher Patit தெரிவித்தார்.
லைசென்ஸ் அனுமதியோடு வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலை செய்து வரும் 35 வயதான பாதிக்கப்பட்ட ஆடவர், கோலாலம்பூரில் இருந்து Alai- யில் உள்ள தமக்கு வீட்டுக்கு திரும்பியபோது, இரும்புப் பெட்டியில் இருந்த ரொக்கமும் நகையும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியுற்று இருக்கின்றார்.
இரும்புப் பெட்டி உடைக்கப்பட்டு பணமும் பொருளும் எடுக்கப்பட்டதற்கான எந்த சேதமும் இல்லாததை அடுத்து, வீட்டில் இருந்த தனது மனைவியே அச்செயலை செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் அந்த ஆடவர் புகார் கொடுத்ததாக Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைவர் Christopher Patit தெரிவித்தார்.