
ஈப்போ, செப் 17- பேரா மகிழம்பூ தமிழ்ப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு வகுப்பு மாணவி புனிதமலர் தனது கண்கள் கட்டப்பட்ட நிலையில் பொருட்களை அடையாளம் காட்டும் அபார திறனை காட்டி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். இந்த சாதனையை புரிந்து வரும் பத்து வயது மாணவியான புனிதமலர் ராஜசேகரன் எனும் அம்மாணவி ஆசியா அவுட்ஸ்டான்டிங் சைல்ட் ல்ட் விருது பெற ( Asia Outstanding Child Award ) இந்தியா செல்லவிருக்கிறார்.
இந்த மாணவியின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பொருளின் நிறம் , பண நோட்டுகளின் எண்கள், 50 நாடுகளுடைய கொடிகளை அடையாளம் காணும் அபார திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்து வருகிறார். மலேசிய சாதனை புத்தகத்திலும் ( Amazing Malaysia Book of Record) மாணவி புனிதமலரின் சாதனை பெயர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்களை கட்டிக்கொண்டு சதுரங்க காய்களை அடுக்கி சாதனை செய்ததின் வழி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ( Guinness world record ) அவர் இடம் பெற்றார். ஆசியா அவுட்ஸ்டான்டிங் சைல்டு விருது பெற ( Asia Outstanding Child Award ) பெற வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி , புனிதமலர் தமிழகம் திருச்சிக்கு செல்லவிருக்கிறார்.
இம்மாணவி தமிழம் செல்ல ஈப்போவில் உள்ள சித்தி ஆயிஷா நகைக் கடையின் உரிமையாளர் டத்தோ முகமட் அனுவார் இப்ராஹிம் இரண்டு விமான டிக்கெட்டுக்கான செலவுத் தொகையை வழங்கினார்.இம்மாணவி தொடர்ந்து உலக அளவில் புகழ்பெறவேண்டும் என்று வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.ஈப்போ வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்து வருவதாகவும் தமது நிறுவனம் தொடர்ந்து சேவையை வழங்கும் என்று குறிப்பிட்டார்.
இதனிடையே ( Achievers Mind Academy) நினைவாற்றல் பயிற்சி ஒன்றை நான்கு மாத காலமாக அதன் பயிற்றுனர் மாஸ்டர் அழகன் கோவிந்தன் மூலம் தமது மகள் மேற்கொண்டதாக புனித மலரின் பெற்றோர் ராஜசேகர் சிவசங்கரி தம்பதியர் தெரிவித்தனர். மகிழம்பூ தமிழ்பள்ளியின் தலைமையசிரியர் மு. கோகிலவாணி உந்துதலால் புனிதமலர் இப்பயிற்சியை கலந்துக்கொண்டு தனது திறமையை வளர்த்துக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இவ்வேளையில் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆகியோரின் ஒத்துழைப்பும் மணவியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.