
ஜப்பானிய கடல் பகுதியில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பாய்ச்சி வட கொரியா சோதனை செய்துள்ளது.
உள்நாட்டு நேரப்படி, நேற்று அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்தது.
அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் இராணுவ பயிற்சி நடைபெற்று வரும் நிலையில், பியோங்யாங் அந்த சோதனையை நடத்தியுள்ளது.
அவ்விரு நாடுகளுக்கு இடையில், மேற்கொள்ளப்படும் இராணுவப் பயிற்சிகள் எப்பொழுதும் வடகொரியாவை எச்சரிலூட்டுவதாக கருதப்படுகிறது.
அதனால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்துலக தடைகளை மீறி வட கொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வதும் வழக்கமாகியுள்ளது.
நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏவுகணை, கொரிய தீபகற்பத்தின் வான் பகுதியை கடந்து சென்றதாக கூறப்படுகிறது.
எனினும், வட கொரியாவின் அந்த சோதனை குறித்து கருத்துரைக்க வாஷிங்டன் மறுத்து விட்டது.