Latestமலேசியா

முதியாரா டமன்சாராவில், உதவிப் போலீஸ் வாகனத்திற்கு எரியூட்டிய ஆடவன் ; இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளான்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 19 – தலைநகர், முதியாரா டமன்சாராவிலுள்ள, MRT இலகு இரயில் நிலையத்தில், உதவிப் போலீசாரின் காருக்கு தீ வைத்த சம்பவத்தை அடுத்து, டிக் டொக்கில் வைரலான ஆடவன் ஒருவனுக்கு எதிராக இன்று பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில், இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும், 26 வயது முஹமட் ஹசிப் சியாசானி சுல்கிப்லே எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினான்.

இம்மாதம் 15-ஆம் தேதி, பின்னிரவு மணி 1.17 வாக்கில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையுன், அபராதமும் விதிக்கப்படலாம்.

இதனிடையே, அதே MRT இலகு இரயில் நிலையத்தின் சுவரை கிறுக்கி சேதப்படுத்தியதாக, அவனுக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தபட்டுள்ளது.

அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரையிலான சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அவ்வாடவனை இன்று ஒன்பதாயிரத்து 500 ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கிய வேளை ; இவ்வழக்கு விசாரணை மார்ச் 21-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!