கோலாலம்பூர், பிப் 16 – தங்களைச் சுற்றி நிகழும் சம்பவங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக டிக் டாக் திகழ்கிறது. அவ்வகையில், அண்மையில் இரவு நேரத்தில், ATM இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, தானியங்கி கதவு திடிரென மூடியதால் உள்ளேயே சிக்கிக் கொண்ட அனுபவத்தை ஆடவர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பணத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு எப்படியாவது வெளியே வந்து விடலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் இயந்திரத்திலிருந்து பணம் இன்னும் வெளியே வராததால் உள்ளேயே சிக்கிக் கொள்ளும் நிலைக்கு தாம் ஆளானதாக கூறியுள்ளார் Syahrul Asyraf.
சம்பவத்தின் போது யாரும் இல்லாத நிலையில் என்ன செய்வது என அறியாது, சற்று நேரம் குழப்பியிருந்த நிலையில், அந்த வங்கியின் Hotline எண்ணுக்கு அவர் அழைத்திருக்கிறார்.
பின்னர் , தானியங்கி முறையில் மூடிக் கொண்ட அந்த கதவின் ஓரத்தில் இருக்கும் பட்டனை அழுத்தி வெளியேறும்படி தமக்கு ஆலோசனை கூறப்பட்டதாக Syahrul Asyraf தெரிவித்தார்.
அந்த சம்பவத்தால், வங்கியின் ATM பிரிவில் தாம் குளிரில் 1 மணி நேரம் சிக்கி உடல் நடுங்கியதாக, அந்த ஆடவர் தமது கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.