
ஈப்போ, ஆக 30- கத்தரிக் கோலினால் தனது தாயாரை மிரட்டிய குற்றத்தை ஒப்புக் கொண்ட 48 வயதுடைய குத்தகை தொழிலாளியான வி.குமரனுக்கு ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 8 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் S .Punitha முன்னிலையில் குற்றவியல் சட்டத்தின் 506ஆவது விதி . 323 மற்றும் 326 விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுக்களை குமரன் ஒப்புக்கொண்டார்.
பணம் கொடுக்க மறுத்ததால் கடந்த ஞாயற்றுக்கிழமையன்று மாலை 4 மணியளவில் Pesara Klebang Jaya விலுள்ள வீடு ன்றில் ஒரு ஜோடி கத்தரிக்கோலிலினால் தமது தாயாரை மிரட்டியதாக குமரன்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
தமது தாயாரை படுக்கையில் தள்ளியதால் அவர் கீழே விழுந்தார், அதன் பின் கத்தரிக்கோலை தமது தாயரின் கழுத்தில் வைத்து அவரை கொல்லப்போவதாக மிரட்டியதாக குமரனுக்கு எதிராக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குமரனுக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.