Latestமலேசியா

கத்தரிக்கோலால் போலீசைத் தாக்கி காயப்படுத்திய சந்தேக நபர் 6 நாட்களுக்கு தடுத்து வைப்பு

கோத்தா பாரு, செப்டம்பர் -1, கிளந்தான் கோத்தா பாருவில் சந்தேக நபர் 2 கத்தரிக்கோல்களைக் கொண்டு தாக்கியதில், போலீஸ்காரருக்கு கைகளில் காயமேற்பட்டது.

கம்போங் கீஜாங் பாடாங்கில் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

சதிநாச வேலை தொடர்பில் 30 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரைப் பிடிப்பதற்காக போலீஸ் குழு சென்றிருக்கிறது.

அப்போது முரண்டு பிடித்த அவ்வாடவர், சட்டென மரச்செடிகளை வெட்ட பயன்படுத்தப்படும் 2 பெரிய கத்தரிகோல்கலால் தாக்கத் தொடங்கினார்.

அதில் ஒரு போலீஸ்காரருக்கு இரு கைகளிலும் காயமேற்றப்பட்டது.

தற்காப்புக்காக போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில், சந்தேக நபர் இடது தொடையில் காயமடைந்தார்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக உள்ளது.

இந்நிலையில் விசாரணைக்காக அந்நபர் 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!