Latestசிங்கப்பூர்
கத்திமுனையில் பெண்ணை பிடித்து வைத்த ஆடவன் ; சிங்கப்பூரில் பரபரப்பு

சிங்கப்பூர், ஜன 10 – சிங்கப்பூரில் , ஆடவன் , கத்தி முனையில் பெண் ஒருவரை பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போதைப் பொருள் உட்கொண்டிருந்த அந்த 42 வயது ஆடவனை போலீசார் மடக்கி பிடித்த நிலையில், பொதுவிடத்தில் ஆபத்தான பொருளை வைத்திருந்தற்காக அவன் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது.
பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்திருந்த அந்த ஆடவன் , சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரை மிரட்டவோ , எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவோ இல்லையென , அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.